நடிகர் நசிருதீன் ஷா பிறந்த தின பதிவு
நசிருதீன் ஷா ஒரு தேசியத் திரைப்பட விருது வென்ற இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர். அவர், இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 2003வது வருடம், இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த சேவைகளுக்காக, இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கிக் கௌரவித்தது.
நசிருதீன் ஷா இந்தியாவின் உத்திரப் பிரதேசம் என்னும் மாநிலத்தில் பராபங்கி என்னும் இடத்தில் பிறந்தார். அவர் பத்தொன்பதாவது நூற்றாண்டைச் சேர்ந்த ஆஃப்கன் மாவீரர் ஜன் ஃபிஷன் கான் என்பவரின் வம்சத்தில் வந்தவர்; மற்றும் எழுத்தாளர் இட்ரிஸ் ஷா, புகழ்பெற்ற பாகிஸ்தானிய நடிகர் சையத் கமல் ஷா, பாகிஸ்தான் உளவுத் துறையின் தலைமை இயக்குனர் ஷா மெஹபூப் ஆலம் மற்றும் மரப்பந்தாட்ட வீரர் ஓவைஸ் ஷா ஆகியோரின் உறவினரும் ஆவார். நசிருதீன் ஷான் தனது பள்ளிக் கல்வியை செயிண்ட் அன்ஸெல்ம்'ஸ் ஆஜ்மிர் பள்ளியிலும், பின்னர் நைனிடால், செயிண்ட் ஜோசஃ...
