Sunday, June 21
Shadow

Tag: பதிவு

நடிகை சந்தோஷி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சந்தோஷி, மார்ச் 31, 1987இல் பிறந்த ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். பாலா , ஜெய் மற்றும் ஹனிமூன் எக்ஸ்பிரஸ் படங்களில் நடித்ததின் மூலமாக அறியப்படுகிறார். மேலும் பிரதானமான தொலைக்காட்சித் தொடரான "அரசி"யில் இவரது நடிப்பு குறிப்பிடத்தக்கது. சந்தோஷி, கோபால கிருஷ்ணா மூர்த்தி மற்றும் தொலைக்காட்சி நடிகை பூர்ணிமா ஆகியோருக்கு இந்தியாவிலுள்ள சென்னையில் பிறந்தார். இவருக்கு எட்டு வயது இருக்கும்போது, இவருடைய தாயுடன் முதல் முறையாக ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். பின்னர் பாபா (2002) படத்தில் அறிமுகமானார். இதில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதில், மனிஷா கொய்ராலாவின் சகோதரியாக நடித்தார். அதன்பிறகு, ஆசை ஆசையாய் (2002), பாலா (2002), மாறன் (2002) மற்றும் இராணுவம் (2003) போன்ற பல தமிழ் திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு சமுத்திரகனியின் உன்னை சர...

நடிகை சி. கே. சரஸ்வதி மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
சி. கே. சரஸ்வதி பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் நகைச்சுவை, குணசித்திரப் பாத்திரங்களிலும், பின்னர் வில்லி கதைப்பாத்திரங்களில் நடித்தார். சரஸ்வதி 1950 தொடங்கி 1990 வரை ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். பெரும்பாலும் படங்களில் வில்லியாக கொடுமைக்கார மாமியாராக, அத்தையாக நடித்தாலும் சிறந்த குணசித்திர, நகைச்சுவை நடிகையும் கூட என்றும் சிலப்படங்களில் நிரூபித்துள்ளார். ராஜகுமாரி, மாங்கல்ய பாக்கியம்,சோப்பு சீப்பு கண்ணாடி , பொன்முடி, திகம்பர சாமியார், எங்க மாமா, தூக்கு தூக்கி, தாய், மகேஸ்வரி, வண்ணக்கிளி, பூலோக ரம்பை, கண்ணே பாப்பா, மங்கள வாத்தியம்,, உழைக்கும் கரங்கள், வாணி ராணி, சிங்காரி,லட்சுமி கல்யாணம், தில்லானா மோகனாம்பாள், பார்த்தால் பசிதீரும், நானும் ஒரு பெண், மன்னிப்பு, இரு கோடுகள், இதோ எந்தன் தெய்வம், கல்யாண ஊர்வலம், தாயே உனக்காக, சௌபாக்கியவதி, ப...

நடிகை அனன்யா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அனன்யா என்ற தமது திரைப்பெயரால் பரவலாக அறியப்படும் ஆயில்யா நாயர் (Ayilya Nair), மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை. இவரது அறிமுகம் 2008ஆம் ஆண்டில் பாசிடிவ் என்ற மலையாளத் திரைப்படத்தில் அமைந்தது. தமிழில் அடுத்த ஆண்டு நாடோடிகள் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றுத் தந்தது. மேலும் இப்படத்திற்காக இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் தொலைக்காட்சி விருதினைப் பெற்றார். இவர் நடித்த படங்கள்:  இரவும் பகலும் வரும், புலிவால், எங்கேயும் எப்போதும், சீடன், நாடோடிகள்...

நடிகர் சரத்குமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சரத்குமார் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். முன்னால் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 1954சூலை 14 அன்று பிறந்தார்.இவரது சகோதரி மல்லிகா குமார். இவர் காரைக்குடியை அடுத்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலக்காவூர் நாடார் குடும்பத்தை சேர்...

ஒளிப்பதிவாளர் திரு பிறந்த நாள் பதிவு

Birthday, Top Highlights
கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு போய் வெற்றிக்கொடி நாட்டிய வர்கள் வரிசையில் முக்கிய மானவர் ஒளிப்பதிவாளர் திரு. அஜய் தேவ்கன், ரண்பீர் கபூர், அக்‌ஷய்குமார், சல்மான்கான், ஹிரித்திக் ரோஷன் என்று பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்கள் அனை வருக்கும் தங்கள் படத்தில் திரு பணியாற்றினால் அப்படியொரு மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் பி.சி ராம் பட்டறையில் இருந்து வந்த இவர், சமீபத்தில் வெளியான ‘க்ரிஷ் 3’ மூலம் இந்திய திரையுலகையே தன் ஒளிப்பதிவால் மிரளவைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் திரு பணியாற்றிய படங்கள்  பேட்ட, மகளிர் மட்டும், சக்தி, காதலா காதலா, ஹே ராம், ஆளவந்தான், லிட்டில் ஜாஆன், லேசா லேசா, கிரீடம், 24, வ்னமக்ன், மெர்குரி...

நடிகை அனு இம்மானுவேல் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அனு இம்மானுவேல் ஒரு இந்திய நடிகை ஆவார். மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப் படத்தில் ஜெயராம் மற்றும் சாமுருதா சுனில் ஆகியோரின் மகளாக நடித்தார். அவர் ஆக்சன் ஹீரோ பிஜூ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இம்மானுவேல் அமெரிக்காவில் டெக்சசில் பிறந்தார். டாலசில் அவர் வளர்ந்து வந்தார். சுவப்ன சஞ்சரி படத்தில் இந்தியாவில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே அவர் நடித்தார். படத்தின் முடிவில் அவர் உயர்நிலைப் பள்ளியை முடிக்க அமெரிக்காக்குத் திரும்பிச் சென்றார். உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது கலைத் துறையில் ஏதாவது ஒன்றைத் தொடர வேண்டும் என்று அனு அறிந்திருந்தார். உயர்நிலைப் பள்ளியில் அவரது முதல் வருடத்தில் துல்கர் சல்மானுடன் சார்லீ படத்தில் நடிக்க முதல் தேர்வாக இருந்தார். ஆனால் இறுதி தேர்வுகள் காரணமாக அவர் திரும்பப் பெற வேண்டியிருந்தது. நிவின் பாலி...

நடிகை சுருதி ராஜ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
நடிகை சுருதி ராஜ், சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் ஹீரோயின் துளசியை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. இன்றைக்கும் அவர் சன் டிவியில் அபூர்வராகங்களில் பவித்ராவாக வந்து இல்லத்தரசிகளிடம் பேசி விட்டு செல்கிறார். அன்னக்கொடியும் 5 பெண்களும் சீரியலில் கவுரியாக மாமியாரை எதிர்க்கும் மருமகளாக நடிக்கிறார். என்னதான் ஹீரோயினாக நடித்தாலும் மூன்றாம் பிறை ஸ்ரீதேவி போல பைத்தியமாக நடிக்க வேண்டும் என்பது ஸ்ருதியின் கனவாம்.   சன் டிவியில் அபூர்வ ராகங்கள் , ஜீ தமிழ் டி.வியில் 'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி ராஜ். மாண்புமிகு மாணவன், காதல் டாட்காம், ஜெர்ரி போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். மலையாள, கன்னட படங்களிலும் நடித்திருந்தாலும் ஸ்ருதியை தமிழக ரசிகர்களிடையே அடையாளம் காட்டியது தென்றல் சீரியல்தான். விஜய் டிவியின் 'ஆபீஸ்' ஸ்ருதியை வே...

நடிகர் ராம் சரண் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ராம் சரண் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நந்தி விருது, பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை வென்றார். இவர் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலம், சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை சிரஞ்சீவி மற்றும் தாய் சுரேகா சிரஞ்சீவி ஆவார். இவரின் குடும்பம் ஒரு திரைப்பட கலை குடும்பம் ஆகும். இவர் டிசம்பர் 1ம் திகதி 2011ம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் நந்தி சிறப்பு நடுவர் விர...

நடிகை மதுபாலா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மதுபாலா ஓர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை. மதுபாலா மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் இந்தித் திரைப்பட நடிகை மதுபாலாவின் நினைவாக பெற்றோர் இவருக்கு இந்தப்பெயர் சூட்டினர். அசோக் குமார், தேவ் ஆனந்த், மோகன்லால், மம்முட்டி, அக்க்ஷய் குமார், ரிஷி கபூர், ஜீதேந்திரா, நசிருத்தீன் ஷா, அர்ஜூன், பிரபு தேவா, பிரபு, மிதுன் சக்கரவர்த்தி, ஜாக்கி செராஃப், கோவிந்தா, அஜய் தேவ்கான், சைய்ஃப் அலி கான், நானா படேகர் எனப் பலருடன் நடித்துள்ளார். மதுபாலாவின் முதல் திரை அறிமுகம் மலையாளத் திரைப்படம் ஒத்தயாள் பட்டாளத்தில் நிகழ்ந்தது. தமிழ் திரைபடங்களில் முதன்முதலாக கே.பாலச்சந்தரின் "அழகன்" திரைப்படத்தில் மம்முட்டி, பானுப்பிரியா மற்றும் கீதா ஆகியோருடன் நடித்தார். இந்தித் திரைப்படங்களில் முதல் படமாக மற்றொரு புதுமுக நடிகராக அறிமுகமான அஜய் தேவ்கன்னுடன் இணையாக...

நடிகை சுகுமாரி மறைந்த தின பதிவு

Top Highlights
சுகுமாரி தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தார். நாகர்கோவிலில் பிறந்த இவர் தன்னுடைய 10-வது வயதில் இருந்தே நடிக்கத் தொடங்கினார். பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய அரசின் 2003 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர். 2010ம் ஆண்டு நம்ம கிராமம் என்ற படத்தில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார். 1940-ல் நாகர்கோவிலில் பிறந்தவர் சுகுமாரி. அத்தையும் நடிகை பத்மினியின் தாயுமான சரஸ்வதி அம்மாவிடம், சென்னையில் வளர்க்கப்பட்டதால், சிறு வயதிலேயே நடனம் மற்றும் நடிப்புத் துறையில் அவர் நுழைந்துவிட்டார். தனது 11-வது வயதில் ஓர் இரவு என்ற படத்தில் அறிமுகமாகி, சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த சுகுமாரி தனது 19-வது வயதில் பிரபலத் தமிழ் இயக்குநர் பீம்சிங்கின் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டார். திருமணத்துக்குப் பிறக...