Friday, April 17
Shadow

Tag: பதிவு

பாடகி மாலதி லட்சுமணன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மாலதி லட்சுமணன் தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். மன்மத ராசா பாடலை பாடியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இவர் பாடிய பாடல்கள்: திருடா திருடி படத்தில் "மன்மத ராசா", பார்த்திபன் கனவு படத்தில் "வாடி மச்சினியே", திருப்பாச்சி படத்தில் "கும்பிட போன தெய்வம்", சச்சின் படத்தில் "குண்டு மாங்க"

போஸ்டர் நந்தகுமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
இவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கும் நடிகர் மட்டுமின்றி, தயாரிப்பாளர் மற்றும் போஸ்டர் டிஸ்டர்மியூட்டராக இருந்து வருகிறார். மெட்ராஸ் படத்தில் நடித்ததின் மூலம் இவர் பிரபலமடைந்தார். இவர் சினிமா துறையில் மிகப்பெரியளவில் போஸ்டர் டிஸ்டர்மியூட்டராக சேவையாற்றி வருகிறார். இந்த் தொழிலை இவர் 1950ம் ஆண்டிலேயே தொடங்கி நடத்தி வருகிறார். இயக்குனர் பாண்டிராஜ்ஜின் இது நம்ம ஆளு படத்தில் துணை தயாரிப்பாளராக பணியாற்றினார். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தின் மூலம் நடிகராக மாறினார். பின்னர் வில் அம்பு என்ற படத்தை தயாரித்து நடித்தார். இவர் நடித்த படங்கள்: மெட்ராஸ், கதகளி, வில் அம்பு, கபாலி, மாவீரன் கிட்டு, போங்கு, சத்ரியன், நிபுணன், பலூன், ஸ்கெட்ச், சிலுக்குவார்பட்டி சிங்கம்...

தயாரிப்பாளர் மா. ரா. மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
மா. ரா. என பிரபலமாக அறியப்பட்ட மா. ராமச்சந்திரன் ஒரு எழுத்தாளரும், திரைப்பட கதை வசனகர்த்தாவும், இயக்குநரும், தயாரிப்பாளருமாவார். சாண்டோ சின்னப்பா தேவருக்குச் சொந்தமான தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கதை இலாகாவில் பணியாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். முன்னணி நடிகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்றோர் நடித்த படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். இவற்றுள் என் அண்ணன், பலே பாண்டியா, ராமன் தேடிய சீதை என்பன குறிப்பிடத்தக்கவை. கல்யாண மண்டபம் (1965) என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். அப்பா அம்மா (1974) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சென்னை இராயப்பேட்டையில் ஒரு பதிப்பகத்தை நடத்தி நூல்களை வெளியிட்டார். உடல்நலக் குறைவு காரணமாகத் தனது 81-ஆவது வயதில் சென்னை வேளச்சேரியில் 2014 ஆகஸ்ட் 26 செவ்வாய்க்கிழமை கா...

நடிகர் சுரேஷ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித் து வரும் பிரபலமான இந்திய நடிகர். 1980 களில் தமிழ் திரைப்பட துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார். 1981 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பன்னீர் புஷ்பங்கலில் நடிகர் அறிமுகமானார். இது வரை 275 படங்களுக்கும் மேல் நடித்து உள்ளார். சுரேஷ் சென்னையில் வளர்க்கப்பட்டு, ஆக்ஸ்போர்டு ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அவருக்கு நிகில் என்ற ஒரு மகன் இருக்கிறார் இவர் நடித்த படங்கள்: பன்னீர் புஷ்பங்கள், அவள், பார்ட்டி...

நடிகர் ராஜ்கிரண் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ராஜ்கிரண் இந்தியத் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். இவருடைய இயற்பெயர் காதர் என்பதாகும். திரையுலகில் இவருடைய ராஜ்கிரண் என்ற பெயரே மிகப் பிரபலமானது. தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்தவர். இவர் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளாார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் வடிவேலுவை அறிமுகப்படுத்தியவர் இவரே. இவர் நடித்த படங்கள்: என்னைப்பெத்த ராசா, அரண்மனைக் கிளி, வேங்கை, முனி, கிரீடம், சண்டக்கோழி, பாண்டவர் பூமி, நந்தா, என் ராசாவின் மனசிலே, திருத்தணி, கிரீடம்...

நடிகை மோனிகா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மோனிகா என்பவர் ஒரு இந்தியா நடிகையாவார். இவர் தன்னுடைய திரை வாழ்க்கையை தமிழ் மொழிப் படங்களில் துவங்கினார். 1990களில் குழந்தை நட்சத்திரமாகவும், 2000ல் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். அழகி திரைப்படம் மூலமாக புகழ்பெற்ற நடிகையானார். அதையடுத்து இம்சை அரசன் 23ம் புலிகேசி மற்றும் சிலந்தி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் தன்னுடைய பெயரை பார்வனா என்று மாற்றம் செய்தார்; ஆனால் 5/30/2014 அன்று இவர் இசுலாம் மதத்துக்கு மாறியுள்ளதால் தன் பெயரை ரகிமா என மாற்றிக் கொண்டார். இவர் நடித்த படங்கள்: அவசரப் போலிஸ் 100, பிரம்மா, என்றும் அன்புடன், பாண்டியன், சக்கரைத் தேவன்,என் ஆசை மச்சான், வரவு எட்டணா செலவு பத்தணா,சதி லீலாவதி, இந்திரா, செல்லக்கண்ணு, ஆசை, மூவேந்தர், லவ் சேனல்,அழகி, காதல் அழிவதில்லை, இனிது இனிது காதல் இனிது, ஜன்னல் ஓரம்...

நடிகர் விஜயகாந்த் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். விஜயகாந்த் என்னும் விஜயராஜ், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால், விஜயகாந்த் மதுரையில் வளர்ந்தார். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் விஜயகாந்த் தனது பதின்ம வயதில் சிறுசிறு பணிகளைச் செய்துவந்தார். இயக்குநர் காஜா 'விஜயராஜ்' என்னும் பெயரை விஜயகாந்த் என மாற்றி வைத்தார்.[1] திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். தொடர் முயற்சிக்குப் பின்னர் 1978 ஆ...

நடிகை எஸ். வரலட்சுமி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
எஸ். வரலட்சுமி, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை மற்றும் பின்னணிப் பாடகியாவார். அவரது பாடல்கள் மற்றும் வேடங்களுக்காக தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே சமாளி மற்றும் தெலுங்கில் மகாமந்திரி திம்மரசு, வேங்கடேசுவர மகாத்மியம் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன. வரலட்சுமி ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் பிறந்தவர். சிறுவயதிலிலேயே பாலயோகினி என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். எஸ். வரலட்சுமி 1938-ம் ஆண்டு கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த "சேவாசதனம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கில் நாகேஸ்வரராவ் உடன் "பால்ராஜ்' படத்தில் அறிமுகமானார். ஏவிஎம்-ன் "ஜீவிதம்' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனை திருமணம் செய்து கொண்டா...

பாடகர் செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
எஸ். ஜி. கிட்டப்பா என்று அழைக்கப்பட்ட செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா திரைப்படக் காலத்துக்கு முன்பே 1920களில் பிரபலமாயிருந்த ஒரு செவ்வியல் பாடகர் மற்றும் நாடகக் கலைஞர். இவர் திரைப்பட நடிகையும் பாடகியுமான கே. பி. சுந்தராம்பாளின் கணவர். கிட்டப்பா செங்கோட்டையில் பிறந்தவர். இயற்பெயர் இராமகிருஷ்ணன். அப்பொழுது செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இவரது தந்தையின் பெயர் கங்காதர அய்யர். தாயார் மீனாட்சி அம்மாள். இவருடன் பிறந்தோர் சுப்புலட்சுமி, சிவகாமி, அப்பாத்துரை, சுப்பையா, செல்லப்பா, சங்கரன், காசி, பிச்சம்மாள், நாராயணன் ஆகியோர். வீட்டிலுள்ளோர் செல்லமாக அழைத்த பெயர் கிட்டன். அதுவே கிட்டப்பா என்ற பெயராக நிலைத்து விட்டது. குடும்பத்தின் வறுமையினால் இவருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. ஆனால் சங்கரதாஸ் சுவாமிகள் ஆதரவால் இசையிலும் நாடகக்கலையிலும் நல்ல தேர்ச்சி பெறமுடிந்தது. மிகச் சிறி...

இயக்குனர் மு.ராஜேஷ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மு. இராசேசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர், தன்னுடைய முழு நீள நகைச்சுவைத் திரைப்படங்களுக்காக அறியப்பட்டவர். இவருடைய முதல் திரைப்படமான சிவா மனசுல சக்தி 2009ஆம் ஆண்டு வெளியானது, அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன் வெளியானது. இவ்விரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து பெரிய இயக்குநராக உயர்ந்தார். இவருடைய முதல் திரைப்படமான சிவா மனசுல சக்தியில், இரண்டாவது திரைப்படத்தின் கதாநாயகனான ஆர்யா (திரைப்படம்: பாஸ் என்கிற பாஸ்கரன்), சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இவருடைய இரண்டாவது திரைப்படமான, பாஸ் என்கிற பாஸ்கரனில் முதல் திரைப்படத்தின் கதாநாயகனான ஜீவா (திரைப்படம்: சிவா மனசுல சக்தி), சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.இவருடைய மூன்றாவது திரைப்படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில், இரண்டாவது திரைப்படத்தின் கதாநாயகனான ஆர்யா (திரைப்படம்: பாஸ் என...