Friday, May 1
Shadow

Tag: பெப்ஸி உமா

பெப்ஸி உமா பிறந்த தின பதிவு

பெப்ஸி உமா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
90-களில் சன்டிவி பார்வையாளர்களுக்கு மட்டுமே தெரியும், வியாழக்கிழமை இரவு எவ்வளவு அரிதான ஒன்றென்று. எத்தனை முயற்சிகள், "கீப் ட்ரை, கீப் ஆன் ட்ரை.." என்ற வார்த்தையை உச்சரிப்பது, தனித்துவம் வாய்ந்த அவரது சிரிப்பு என பெப்ஸி உமா மிகவும் ஸ்பெஷலாக தான் இருந்தார். அன்றைய தமிழ் சினிமா நடிகைகளை விட கொள்ளை அழகாக இருந்தார் பெப்ஸி உமா. மார்டர்ன் உடை உடுத்தாமல், புடவை தான் என்றும் உடுத்துவார். அது கூடுதல் சிறப்பு. இன்று வரையிலும் அவரது இடத்தை நிரப்ப, பூர்த்தி செய்ய எந்த வி.ஜே-வினாலும் முடியவில்லை. ப்ளஸ் டூ படிக்கும் போதே தூர்தர்ஷனில், ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார் பெப்ஸி உமா. இது தான் அவரது வி.ஜே வாழ்க்கையின் முதல் படி. இதன் மூலமாக தான் சன்டிவியில் வாய்ப்பு கிடைத்து பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க ஆரம்பித்தார். பெப்ஸி உமாவிற்கு அந்நாட்களில் ஒரு சினிமா நடிகைக்கு இணையான...