மூக்குத்தி அம்மன் 2 – திரைவிமர்சனம் (Rank 3.5/5)
மூக்குத்தி அம்மன் 2 – பிரம்மாண்டமான ஆன்மிக ஃபேண்டஸி விருந்து! நயன்தாராவின் அதிரடி நடிப்பில் மிரட்டும் அம்மன் அவதாரம்!
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான சினிமா விருந்தாக அமைந்துள்ளது. முதல் பாகத்தின் கதைக்களத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட களத்தில், ஆன்மிகம், ஃபேண்டஸி, ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை எனப் பல அம்சங்களைக் கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி.
இதுவரை அவர் இயக்கிய படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான படைப்பாக இப்படம் அமைந்துள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அந்தப் பிரம்மாண்டம் வெளிப்படுகிறது.
குறிப்பாக, நயன்தாராவின் அம்மன் தோற்றம் மற்றும் அவரது திரை ஆளுமை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்கிறா...
