Thursday, November 5
Shadow

“சிக்னல் அட் 11:30” – வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள படம்! டி. இமான் இசையில் டிரெய்லர், பாடல்கள் வெளியீடு!

“சிக்னல் அட் 11:30” – வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள படம்! டி. இமான் இசையில் டிரெய்லர், பாடல்கள் வெளியீடு!

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அதன் கதையும், அதைச் சொல்லும் விதமும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு படக்குழுவினரின் அர்ப்பணிப்பும் அவசியம். அப்படியான ஒரு முயற்சியாக உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா, பவ்யா திரிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விழாவில் பேசியவர்களின் கருத்துகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்தன.

இணைத் தயாரிப்பாளர் ஷிவானி சுப்ரமணி பேசுகையில், சிறுவயது முதலே பேரரசு, ஆர்.வி. உதயகுமார் போன்ற இயக்குநர்களின் படங்களைப் பார்த்துதான் சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார். டி. இமானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாகவும், தனது அம்மா மலர்விழி இந்தப் படத்தை மிகச் சிறப்பாக இயக்கியுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் தனஞ்செயன், வழக்கமான கதைக்களத்திலிருந்து மாறுபட்டு சுவாரசியமாகப் படம் உருவாகியுள்ளதாகப் பாராட்டினார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல படங்கள் வெளியாகி வருவதாகவும், அந்த வரிசையில் ‘சிக்னல் அட் 11:30’ படமும் வெற்றியைப் பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசும்போது, தமிழ் சினிமாவை நமது அன்றாட வாழ்க்கையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்றார். வேறு துறையிலிருந்து சினிமாவுக்கு வந்துள்ள மலர்விழி நடேசனின் முயற்சியைப் பாராட்டியதுடன், சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், பள்ளிக்கூடம் நடத்தி வரும் ஒருவர் திரைப்படம் இயக்க முன்வந்திருக்கிறார் என்றால், அவர் நிச்சயம் நல்ல கதையைச் சொல்லியிருப்பார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகக் கூறினார். மேலும், இளையராஜாவுக்கு அடுத்தபடியாக மனதைத் தொடும் இசையை வழங்குபவர் டி. இமான் என்றும் பாராட்டினார்.

நடிகர் ஜெயப்பிரகாஷ், படத்தின் முழுக் கதையையும் தான் அறிந்திருக்கவில்லை என்றாலும், தற்போது வெளியான டிரெய்லரைப் பார்க்கும்போது படம் சிறப்பாக உருவாகியிருப்பது தெரிகிறது என்று தெரிவித்தார். இயக்குநர் சரியான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்திருப்பதாகவும் கூறினார்.

நடிகர் விதார்த், சந்தோஷ் பிரதாப் அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடிய மென்மையான மனிதர் என்று குறிப்பிட்டு, அவருக்காகவே இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். மேலும், டி. இமானின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

படத்தின் நாயகி பவ்யா திரிகா பேசுகையில், தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மலர்விழி நடேசனுக்கு நன்றி தெரிவித்தார். சந்தோஷ் பிரதாப் மற்றும் படக்குழுவினருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம் என்றும், குறிப்பாக இமானின் இசையில் உருவான ‘ஜோ ஜோ’ பாடல் தனிப்பட்ட முறையில் மனதுக்கு நெருக்கமாக இருப்பதாகவும் கூறினார். இது ஒரு வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

நடிகை புஜிதா பொன்னாடா, ‘சிக்னல் அட் 11:30’ தனக்கு மிகவும் சிறப்பான திரைப்படம் என்று குறிப்பிட்டார். இயக்குநர் மலர்விழி தனக்கு வழங்கிய வாய்ப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், சக நடிகர் சந்தோஷ் பிரதாப் மிகவும் திறமையான மற்றும் நேர்மறையான எண்ணம் கொண்டவர் என்றும் பாராட்டினார்.

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசும்போது, இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் மலர்விழிக்கு நன்றி தெரிவித்தார். படக்குழுவினர் அனைவரும் படத்தின் கிரீடம் என்றால், அந்தக் கிரீடத்தின் வைரம் டி. இமான் என்று அவரைப் புகழ்ந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு திரைப்படப் பாடலுக்கு நடனமாடியிருப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி வந்தாலும், அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளைத் தாண்டி சாதிக்க வேண்டும் என்றும், மலர்விழி நடேசன் இன்னும் பெரிய உயரங்களை அடைவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இயக்குநர் மலர்விழி நடேசன் பேசுகையில், இது தனது இரண்டாவது திரைப்படம் என்று குறிப்பிட்டார். தான் ரசித்த இயக்குநர்களான ஆர்.வி. உதயகுமார், பேரரசு உள்ளிட்டோர் தனது படத்தின் விழாவுக்கு வந்து வாழ்த்தியது கனவு நனவான தருணம் என்றார். படத்தைப் பார்த்து தனஞ்செயன் பாராட்டியது தனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளதாகவும், ஒரு திரைப்படத்தில் இசைக்கு மிக முக்கியமான இடம் உண்டு என்பதால் டி. இமானின் பங்களிப்பு இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இறுதியாகப் பேசிய இசையமைப்பாளர் டி. இமான், பெண் இயக்குநருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பமும் இந்தப் படத்தைத் தேர்வு செய்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று என்று தெரிவித்தார். கல்வித்துறையில் இருந்து ஒருவர் இயக்குநராக சினிமாவுக்கு வருவது ஆரோக்கியமான மாற்றம் என்றும், சந்தோஷ் பிரதாப் நிச்சயம் பெரிய இடத்தை அடைவார் என்றும் பாராட்டினார். படத்தில் நடித்த கதாநாயகிகள் சிறப்பாக நடித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விழாவுக்கு வருகை தந்து படக்குழுவை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஒரு பெண் இயக்குநரின் கனவு, திறமையான நடிகர்களின் உழைப்பு, அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, டி. இமானின் இசை எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11:30’, வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதைக்களத்துடன் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. டிரெய்லர் மற்றும் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எத்தகைய வரவேற்பு கிடைக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

‘Signal at 11:30’ Promises a Gripping Psychological Thriller; Trailer and Audio Launched in the Presence of Cinema Personalities!

The trailer and audio of Signal at 11:30, an upcoming psychological thriller directed by Malarvizhi Nadesan, were launched at a special event attended by several prominent personalities from the Tamil film industry.

Written and directed by Malarvizhi Nadesan, the film is jointly produced by Malarvizhi Nadesan and Shivani Subramani under the banner of Alar Studios. Music for the film is composed by D. Imman. Santhosh Prathap, Pujitha Ponnada and Bhavya Trikha play the lead roles, while Munishkanth and Jayaprakash appear in important supporting roles.

The event witnessed encouraging words and appreciation from several filmmakers, actors and technicians who attended the occasion.

Co-producer Shivani Subramani expressed her happiness about the project, revealing that watching films by directors such as Perarasu and R.V. Udayakumar had inspired her interest in cinema. She described D. Imman’s music as one of the film’s biggest strengths and appreciated the entire team for their dedicated efforts. She also expressed confidence in her mother Malarvizhi Nadesan’s directorial abilities and hoped audiences would enjoy the film.

Producer Dhananjayan, who had watched the film, appreciated its interesting and unconventional storytelling. He observed that Tamil cinema has been witnessing the release of several good films recently and expressed his hope that Signal at 11:30 would join that successful list. He also wished the entire team success.

Director R.V. Udayakumar highlighted the inseparable relationship between Tamil cinema and everyday life. He congratulated Malarvizhi Nadesan on entering the film industry from a different professional background and stressed the importance of supporting small-budget films. He wished the cast and crew greater success in their careers.

Director Perarasu expressed confidence in Malarvizhi Nadesan’s storytelling, pointing out that someone who has been running an educational institution and has now ventured into filmmaking would certainly have an interesting story to tell. He also praised D. Imman, describing him as a composer whose music has the ability to touch people’s hearts.

Actor Jayaprakash appreciated the trailer, stating that although he was familiar only with the portions involving his character, the trailer gave him the impression that the film had shaped up exceptionally well. He also praised the director for bringing together a talented cast and technical team.

Actor Vidharth spoke warmly about Santhosh Prathap, describing him as a humble and affectionate person. He expressed his wish for the film to succeed and added that D. Imman’s musical contribution would further strengthen the project.

Actress Bhavya Trikha thanked director Malarvizhi Nadesan for giving her the opportunity to be part of the film. She described her experience working with Santhosh Prathap and the team as a happy one. She also revealed that the song ‘Jo Jo’, composed by D. Imman, had a special personal connection with her. Describing the film as a different kind of psychological thriller, she expressed confidence that audiences would enjoy it.

Actress Pujitha Ponnada described Signal at 11:30 as a very special film in her career and thanked Malarvizhi Nadesan for trusting her with the role. She also appreciated her co-star Santhosh Prathap, describing him as a talented and positive person. She praised D. Imman’s music and thanked the entire team for the experience.

Actor Santhosh Prathap thanked Malarvizhi Nadesan for offering him the opportunity to be part of the film. In a heartfelt note, he described the entire team as the crown of the film and D. Imman as the diamond that adorns it. He also expressed his happiness about performing a dance sequence in a film song after several years.

Santhosh further spoke about the growing achievements of women across different fields and appreciated Malarvizhi Nadesan for overcoming challenges and pursuing her filmmaking ambitions. He expressed confidence that she would reach greater heights and appealed to audiences to extend their support to the film.

Director Malarvizhi Nadesan revealed that Signal at 11:30 is her second directorial venture. She described the presence of directors R.V. Udayakumar and Perarasu, whose films she has admired for years, as a dream come true. She also said that Dhananjayan’s positive response after watching the film had given her tremendous confidence.

Highlighting the importance of music in filmmaking, she credited D. Imman’s contribution as one of the major strengths of the project. She thanked the lead actors, technicians and everyone who had worked tirelessly to bring the film to life.

Music director D. Imman revealed that one of the reasons he agreed to work on the film was his interest in collaborating with a woman director. He also appreciated Malarvizhi Nadesan’s transition from the education sector to filmmaking, describing it as a positive development for the industry. He praised Santhosh Prathap’s performance and expressed confidence in his future as an actor. He also appreciated the performances of the female leads and thanked all the guests who had come forward to support the film.

With an unconventional psychological thriller premise, a promising ensemble cast and music by D. Imman, Signal at 11:30 is gearing up to meet audiences. The trailer and audio launch have generated positive expectations, and it remains to be seen how the film connects with moviegoers upon its theatrical release.