Thursday, November 5
Shadow

ரெஜினா கசாண்ட்ரா – நாசர் கூட்டணியில் உருவாகும் புதிய படம்! படப்பிடிப்பு நிறைவு… விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள்!

ரெஜினா கசாண்ட்ரா – நாசர் கூட்டணியில் உருவாகும் புதிய படம்! படப்பிடிப்பு நிறைவு… விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள்!

தமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் வகையிலான புதிய கதைக்களங்களுடன் படங்களைத் தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அறிவிக்கும் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

படத்தின் தலைப்பு மற்றும் கதைக்களம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், படப்பிடிப்பு நிறைவு குறித்த அறிவிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ராவும், அனுபவம் வாய்ந்த நடிகர் நாசரும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்தை இயக்கும் விஷால் வெங்கட், ஏற்கெனவே அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான ‘பாம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். தொடர்ந்து ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படம் மற்றும் ‘ஒரு கோடை மர்டர் மிஸ்டரி’ இணையத் தொடர் மூலம் தனது இயக்கத் திறனை வெளிப்படுத்தியவர். இந்த நிலையில், அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் அடுத்தகட்டமாக என்ன மாதிரியான அனுபவத்தைத் தரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

 

படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் விஷால் வெங்கட் கூறுகையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் எனத் தெரிவித்துள்ளார். ரெஜினா கசாண்ட்ராவின் அர்ப்பணிப்பான நடிப்பும், நாசரின் அனுபவம் நிறைந்த பங்களிப்பும் படத்திற்கு வலுசேர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளதாகப் பாராட்டியுள்ளார். படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான லோகேஷ் கனகராஜ் பேசும்போது, விஷால் வெங்கட்டின் சிந்தனைகளும் கதை சொல்லும் விதமும் தனக்கு எப்போதும் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கதையின் ஆரம்பகட்ட விவாதம் முதல் தயாரிப்புப் பணிகள், தற்போதைய இறுதிக்கட்டப் பணிகள் வரை அவருடன் இணைந்து பயணித்தது மகிழ்ச்சியளிப்பதாகவும், ரசிகர்களுக்குத் தரமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் நோக்கில் படக்குழு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களான நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் கூறுகையில், தமிழ் சினிமாவில் தங்களது தயாரிப்பு நிறுவனத்தின் பயணம் மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் படப்பிடிப்பை இயக்குநர் விஷால் வெங்கட் நிறைவு செய்திருப்பது திருப்தியளிப்பதாகவும், படத்தின் கூடுதல் விவரங்களை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் யார்?

இப்படத்திற்கு ஹரிஹரன் ராஜு கதை எழுதியுள்ளார். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்புப் பணிகளை பிரசன்னா ஜி.கே. கவனிக்கிறார். கலை இயக்கத்தை மனோஜ் குமார் கே. மேற்கொண்டுள்ளார். ஆஷாமீரா ஐயப்பன் வசனங்களை எழுதியுள்ளார்.

தலைமைச் செயல் தயாரிப்பாளர்களாக ஏ. ஜெய் சம்பத், தினேஷ் நரசிம்மன் பணியாற்றியுள்ளனர். பிரதீப் பூபதி இணைத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார். ஆடை வடிவமைப்பை ஜீவா காருண்யா கவனிக்க, விளம்பர வடிவமைப்பை வியாகி மேற்கொண்டுள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்பதே ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Regina Cassandra and Nassar’s Upcoming Film Wraps Up Shooting; More Updates Expected Soon!

Mythri Movie Makers, known for backing distinctive stories and delivering engaging films, has successfully wrapped up the shooting of its upcoming Tamil film in association with G Squad. Directed by Vishal Venkat, the film features Regina Cassandra and veteran actor Nassar in the lead roles.

Announcing the completion of the shoot, the makers have released an official video celebrating the occasion. The announcement has already sparked curiosity among movie buffs, with audiences eagerly awaiting more details about the project, including its title and first look.

Vishal Venkat, who made his directorial debut with Boom starring Arjun Das, has previously earned appreciation for his work in Sila Nerangalil Sila Manidhargal and the web series Oru Kodai Murder Mystery. With this upcoming project, the director is set to present another interesting cinematic venture.

Sharing his experience, director Vishal Venkat said that working with Mythri Movie Makers and Lokesh Kanagaraj had been a memorable experience. He expressed happiness over collaborating with Regina Cassandra and appreciated her dedication throughout the shoot. He also praised Nassar for bringing his character to life and acknowledged the performances of Ramesh Thilak, Sreeja Ravi and the rest of the cast. He added that further updates about the film would be announced soon.

Lokesh Kanagaraj, director and producer of G Squad, expressed his admiration for Vishal Venkat, describing him as a talented filmmaker whose ideas have always been inspiring. He said that he thoroughly enjoyed being part of the journey, from the initial story discussions to production and the ongoing post-production process. He also expressed his happiness about collaborating with Mythri Movie Makers and said the team was looking forward to delivering a complete theatrical experience for audiences.

Mythri Movie Makers’ producers Naveen Yerneni and Y. Ravi Shankar also shared their happiness over the project’s progress. They stated that their journey in Tamil cinema had been rewarding, providing opportunities to collaborate with promising talents. They appreciated Vishal Venkat for completing the shoot within the planned schedule, as committed during the pre-production stage. The producers also expressed confidence that the film would become another memorable addition to their production journey.

Technical Crew

The story has been written by Hariharan Raju, while Hesham Abdul Wahab is composing the music. Selvakumar S.K. handles the cinematography, and Prasanna G.K. is in charge of editing. Manoj Kumar K. serves as the art director, while Aashameera Aiyappan has penned the dialogues.

A. Jai Sampath and Dinesh Narasimhan serve as the executive producers, with Pradeep Boopathy as the co-producer. Jeeva Karunya is handling costume design, while Vyagi is responsible for the promotional design.

With the shooting now complete, the film has moved into its post-production phase. Audiences can look forward to exciting announcements regarding the film’s title, first-look poster, teaser and release plans in the coming days.