Thursday, November 5
Shadow

வில்லன் அவதாரத்தில் மோகன் ராஜா… அரவிந்த்சாமி பாணியில் மிரட்டும் புதிய தோற்றம்! ‘வாணவேடிக்கை’ ட்ரெய்லரால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

வில்லன் அவதாரத்தில் மோகன் ராஜா… அரவிந்த்சாமி பாணியில் மிரட்டும் புதிய தோற்றம்! ‘வாணவேடிக்கை’ ட்ரெய்லரால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

நடிகர் சண்முக பாண்டியனை இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிய தோற்றத்தில் களமிறக்கும் ‘வாணவேடிக்கை’ திரைப்படம், அதன் ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பிறகு திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, இயக்குநர் மோகன் ராஜா இப்படத்தில் முழுநீள வில்லனாக அறிமுகமாகியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சதீஷ் எம்.பி. தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் திரு இயக்கியுள்ளார். சண்முக பாண்டியன் கதாநாயகனாகவும், ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர்கள் ஆர்யா மற்றும் ஜெயம் ரவி இணைந்து வெளியிட்டனர்.

ட்ரெய்லரில் கவனம் ஈர்க்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று சண்முக பாண்டியனின் தோற்றமும் நடிப்பும். வழக்கமான கதாநாயக பிம்பத்திலிருந்து விலகி, மிகவும் இயல்பான இளைஞராக திரையில் அவர் வெளிப்படுகிறார். குறிப்பாக, அவரது உடல்மொழியும், எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதே நேரத்தில், அதிரடியான சண்டைக் காட்சிகளில் அவரது தந்தை கேப்டன் விஜயகாந்தை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம், இப்படத்தின் மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்திருப்பது இயக்குநர் மோகன் ராஜாவின் வில்லன் அவதாரம். இதுவரை இயக்குநராக அறியப்பட்ட அவர், முதன்முறையாக முழுநீள வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் கவனத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அவரது தோற்றமும் கதாபாத்திர வடிவமைப்பும் ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த்சாமியின் ஸ்டைலிஷான வில்லன் கதாபாத்திரத்தை நினைவுபடுத்துவதாகப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவர்களுடன் பருத்திவீரன் சரவணன், இந்துமதி, ஜெயப்பிரகாஷ், இயக்குநர் தமிழ், சித்ரா லட்சுமணன், கிரண், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா, சுபிக்ஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். அர்வி ஒளிப்பதிவைக் கவனிக்க, சுதர்சன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையைப் பிரபல லஹரி ஆடியோ நிறுவனம் கணிசமான தொகைக்கு கைப்பற்றியுள்ளது.

ட்ரெய்லரில் கதாநாயகனின் புதிய பரிமாணம், மோகன் ராஜாவின் வில்லத்தனமான தோற்றம் என இரு அம்சங்களும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், ‘வாணவேடிக்கை’ திரைப்படம் திரையில் எந்த அளவுக்கு அதிரடியைக் காட்டப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

 

Director Mohan Raja Turns Villain! His Striking New Avatar Sparks Buzz as Shanmuga Pandian Stuns in ‘Vaanavedikkai’ Trailer

The trailer of Vaanavedikkai, starring Shanmuga Pandian and Shivani Rajashekar in the lead roles, has created considerable buzz among moviegoers. While Shanmuga Pandian appears in a refreshing new avatar, the film’s biggest surprise is director Mohan Raja, who makes his debut as a full-fledged antagonist.

Produced by L.K. Satheesh MP under the banner of Captain Cine Creations, Vaanavedikkai is directed by Thiru. The film’s trailer was unveiled today by actors Arya and Jayam Ravi, adding to the excitement surrounding the project.

One of the major highlights of the trailer is Shanmuga Pandian’s completely different screen presence. Moving away from the conventional hero image, he appears as an ordinary, relatable young man, bringing a refreshing naturalness to his performance. His realistic body language and screen presence have caught the attention of viewers.

However, it is the action sequences that are particularly noteworthy. Shanmuga Pandian’s energetic performance in the fight sequences reminds many viewers of his father, legendary actor Captain Vijayakanth, creating an emotional connection with fans.

Adding another interesting dimension to the film is director Mohan Raja’s unexpected transformation into a villain. Known primarily for his work behind the camera, Mohan Raja takes on a full-length negative role for the first time. His appearance and character styling have drawn comparisons with Arvind Swamy’s stylish antagonist portrayal in the blockbuster film Thani Oruvan.

The film also features Paruthiveeran Saravanan, Indhumathi, Jayaprakash, director Tamizh, Chitra Lakshmanan, Kiran, Amma Creations Siva, Stills Pandian, Kumki Ashwin, Sara, Subiksha and several others in important roles.

Sam C.S. has composed the music, while Arvi handles cinematography and Sudharsan is in charge of editing.

Adding further value to the film’s musical prospects, leading audio label Lahari Music has acquired its audio rights for a substantial amount.

With Shanmuga Pandian’s refreshing transformation and Mohan Raja’s intriguing villainous avatar emerging as the major talking points, the trailer has successfully raised expectations. All eyes are now on how Vaanavedikkai translates these promising elements into a compelling cinematic experience.

The film’s biggest attraction? A familiar hero in an unfamiliar avatar and a director stepping into the shoes of a menacing villain!