100 % காதல் திரை விமர்சனம் (Rank 3.5/5)
எதிலும் நம்பர் ஒன்னாக இருக்கவேண்டும் என்று நினைக்கிற நாயகன் ஜீ.வி.பிரகாஷ் படிப்பிலும் நம்பர் ஒன்னாகவே இருக்கிறார். அவருடைய அத்தைபெண் ஷாலினி பாண்டே, ஜீ.வி.பிரகாஷ் வீட்டிலேயே தங்கிப் படிக்கிறார். கற்றுக்கொடுப்பவர்களிடமே வித்தையைக் காட்டுவார்களே அதுபோல் படிப்பில் ஜீ.வியையே மிஞ்சுகிறார். அடுத்து கதையில் ஒரு வில்லன் தேவைப்படுவதால் அவர்கள் இருவரையும் தாண்டி அதே கல்லூரியில் படிக்கும் யுவன்மயில்சாமி முதல்நிலை எடுக்கிறார்.
’ஈகோ’என்கிற இரண்டெழுத்து ஒரு காதல் ஜோடியை என்ன பாடுபடுத்தும் என்கிற அரதப்பழசான ஒரு கதையை 100 சதவிகிதம் அப்படியே தூசிதட்டி எடுத்திருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் விதமாகவே இப்படத்துக்கு ‘100 % காதல்’என்று பெயரிட்டிருக்கிறார்கள் போலும். வழக்கமாக இரண்டு படிகள் ஏறினால் மூன்று படிகள் சறுக்கும் ஜீ.வி.பிரகாஷ், இதற்கு முன் நல்ல பெயர் சம்பாதித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’பெயரை இப்படத்தின...
