கேரளா வெள்ள நிவாரண நிதி ஒரு கோடி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்
ஏ.ஆர்.ரஹ்மான் ஒவ்வொரு வெற்றியிலும் சொல்வது எல்லா புகழும் இறைவனுக்கே. அப்படிப்பட்ட இறை பக்தி மிகுந்த ரஹ்மான் கடவுளின் நாடு என அழைக்கப்படும் கேரளாவுக்கு ரூ. 1 கோடி நிதியளித்துள்ளார்.
சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில், முஸ்தபா முஸ்தபா பாடல் வரிகளை "கேரளா... கேரளா...டோண்ட் வொர்ரி கேரளா... என்று மாற்றிப் பாடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்.
இப்போது இசை நிகழ்ச்சி மூலம் கிடைத்த பணத்தில் ரூ. 1 கோடி கேரளாவுக்கு வழங்கிய...
