அப்துல் கலாம் காலமான தினமின்று
மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் காலமான கடைசி நிமிடங்கள் குறித்து அவரது ஆலோசகர் ஸ்ரீஜன் பால் சிங் பகிர்ந்து கொண்ட சேதி இது என்று *நம் கட்டிங் கண்ணையா* நீட்டிய பேப்பரில் இருந்த சேதி இது:
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ஐஐஎம் கல்லூரி நிகழ்ச்சி மேடையில் கலாம், திடீர் மாரடைப்பால் மயங்கி சரிந்த போது அவரை தாங்கிப்பிடித்தவர் ஸ்ரீஜன் பால். கலாமின் ஆலோசகர் கூறியதில் சில:
கடந்த 27ம் தேதி பகல் 12 மணிக்கு டெல்லியில் இருந்து விமானத்தில் கலாமுடன் நானும் கிளம்பினேன். அவருக்கு 1ஏ சீட்; எனக்கு 1 சி சீட். வழக்கமாக அவர் அணியும் ‘கலாம் சூட்’ டில் வந்திருந்தார். கருப்பு நிற கோட் அது. நான் புன்முறுவல் பூத்தபடி, சூப்பராக இருக்கிறது என்றேன். அதற்கு சிரித்துக்ெகாண்டார்.
இரண்டரை மணி நேரம் பயணித்து கவுகாத்தியை அடைந்தது விமானம். வானிலைக்கு ஏற்ப சற்று குலுங்கிய விமானத்தில் நான் குளிரில் நடுங்கியதை பார்...