சென்னை குரோம்பேட்டையில் உள்ள MIT பொறியியல் கல்லூரியில் தான் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங் படித்தார்.
அந்த கல்லூரியில் கடந்த சனிக்கிழமை சுமார் மூவாயிரம் பொறியியல் மாணவர்கள் மத்தியில் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டைட்டில் டிசைன் அறிமுக விழா நடந்தது. அதில் மாணவர்கள் ஹரிஷ், மற்றும் ரேஷ்மா டைட்டிலை வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
அப்துல் கலாம் படித்த எங்கள் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி பட டைட்டிலை வெளியிட்டதை மிகுந்த பெருமையாக கருதுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
படம் பற்றி திரு.எஸ்.ஏ சந்திரசேகரன் அவர்கள் கூறும்போது, ‘யாரையும் எதிர்பார்க்காமல் எளியவர்களுக்கு ஆதரவாகவும் அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் ஒன் மேன் ஆர்மியாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் போராளியின் படத்தை நாட்டு மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்க்க தான் இவ்விழாவை மாணவர்கள் மத்தியில் நடத்தினோம் ” என்றார்.
அவ்விழாவில் டிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன், அம்பிகா, லிவிங்ஸ்டன், புலி பட தயாரிப்பாளர் P.T.செல்வகுமார் மற்றும் படத்தின் இயக்குனர் விக்கி அவர்களும் கலந்து கொண்டனர்.