Wednesday, June 24
Shadow

Tag: #abisaravanan #bakkiyaraj #shankarkrishnamoorthy

வளரும் நடிகரை சூப்பர் ஸ்டாராக வாழ்த்திய பாக்யராஜ்..!

வளரும் நடிகரை சூப்பர் ஸ்டாராக வாழ்த்திய பாக்யராஜ்..!

Latest News
கடந்த வருடம் வெளியான ‘பட்டதாரி’ படம் மூலம், ரசிகர்கள் மனதில் பளிச்சென இடம்பிடித்தவர் தான் நடிகர் அபி சரவணன்.. வழக்கம்போல இவரும் ஒரு சாதாரண புதுமுகமாகத்தான் கடந்துபோயிருப்பார்.. ஆனால் சமூக நிகழ்வுகளில் இவர் தொடர்ந்து காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் ரசிகர்களிடம் இவரை இன்னும் நெருக்கமாக்கி விட்டன என்பதே உண்மை. மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதோடு, மதுரை, அலங்காநல்லூர், புதுக்கோட்டை என அந்த மண்ணுக்கே நேரடியாக சென்று போராட்டங்களில் கலந்துகொண்டவர் சரவணன்.. நெடுவாசலுக்கு சென்று மீத்தேன் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பதாகட்டும், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாகட்டும் அனைத்து நிகழ்வுகளிலு அபி சரவணனை முதல் ஆளாக பார்க்க முடிந்தது. விவசாயிகளுக்கான போராட்டங்களில் முன்னின்று பங்கேற்று வருகிறார்.. டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடிய விவசாயி...