Wednesday, October 28
Shadow

Tag: #Actress #ManishaYadav

கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் – மனீஷா யாதவ்

கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் – மனீஷா யாதவ்

Latest News, Top Highlights
“வழக்கு எண்18/9”, “ஆதலால் காதல் செய்வீர்”,”ஜன்னல் ஓரம்” என வரிசையாக முத்திரை பதித்த இயக்குநர்களுடன் பயணித்தவர் நடிகை மனீஷா யாதவ். சமீபத்தில் வெளியான “ஒரு குப்பை கதை” படத்தின் மூலமாக சினிமா ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் பாராட்டுக்களை வாரிக் குவித்திருக்கிறார். நிதானமாக கதைகளை தேர்வு செய்து நடிப்பது, ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்காக முழுமையான அர்ப்பணிப்போடு உழைப்பது என அவசரப்படாமல் தமிழ் சினிமாவில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் மனீஷா. இந்த பக்குவம் குறித்து அவர் கூறுகையில், “பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், கரு.பழனியப்பன்.. என வரிசையாக முதல் மூன்று படங்களுமே முக்கியமான இயக்குநர்களுடையது. அந்த வகையில் நிஜமாகவே நான் ரொம்ப லக்கினு தான் சொல்வேன். “வழக்கு எண்” நடிச்சிட்ருக்கும் போதே எனக்கு “ஆதலால் காதல் செய்வீர்” வாய்ப்பு கிடைச்சது. அதே போலதான் “ஜன்னல் ஓரம்” படமும். இந்த மூன...