
போலிசிடம் அடிவாங்கியவுடன் வெற்றியை ஊர்ஜிதபடுத்திவிட்டேன் இசையமைப்பாளர் சாம் C.S
ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்த படம் 'அடங்க மறு'. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார். கிளாப் போர்ட் ப்ரொடக்ஷன்ஸ் கிருஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்த படம் பல போட்டிகளையும் தாண்டி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
ஜெயம் ரவியின் அண்ணன் மோகன்ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது ரவி இந்த அளவு மகிழ்ச்சியாக இருந்து நானும், அப்பாவும் பார்த்ததில்லை என்றார். அவர் தேர்ந்தெடுத்து நடித்த படம் என்பதும் இந்த மகிழ்ச்சிக்கு காரணம். அடங்க மறுவுடன் வெளியான மற்ற படங்களும் வெற்றி பெறணும் என எந்த பொறாமையும் இல்லாமல் இருந்த இந்த குழுவினரின் மனசு தான் இந்த பெரிய வெற்றிக்கு காரணம் என...