தனுஷ் படத்தில் நடிப்பது மிக பெரிய சாவால் நடிகை அதிதி
மணிரத்னத்தின் காற்று வெளியிடை படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் பாலிவுட் நடிகையான அதிதி ராவ் ஹைதரி. அதன் பிறகு அவர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் நடித்த செக்கச் சிவந்த வானம் நேற்று வெளியானது. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அதிதி.
ப. பாண்டி படத்தை அடுத்து புதிதாக ஒரு படத்தை இயக்கி வருகிறார் தனுஷ் இந்த படத்தில் நாகர்ஜுனா, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் ஹைதரி, அனு இமானுவேல் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஆனால் நான் ருத்ரன் என்ற தலைப்பை தனுஷ் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது
தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி நடிக்கிறார். இது குறித்து அதிதி கூறியிருப்பதாவது, நான் ஏற்கனவே ஒரு படத்தில் தனுஷுடன் நடிப்பதாக இருந்தது. ஆனால் டேட்ஸ் பிரச்சனையால் அது முடியாமல் ...
