Tuesday, June 9
Shadow

Tag: #aishwaryajeshar

சாமி 2 த்ரிஷாவுக்கு பதில் இணைந்த முன்னணி நடிகை

சாமி 2 த்ரிஷாவுக்கு பதில் இணைந்த முன்னணி நடிகை

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் சக்சஸ் இயக்குனரான ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருந்த சாமி படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்புடன் வெற்றி பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடித்து இருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. விக்ரம் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். அப்பா விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விட்டார் திரிஷா. இதனால் இந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருந்தது. இந்நிலையில் தற்போது சாமி-2ல் த்ரிஷாவுக்கு பதிலாக முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார். இதனை உறுதி செய்யும் விதமாக ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன....