Thursday, June 25
Shadow

Tag: #aishwaryarajesh #ameer

ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட “வட சென்னை “படத்தின் டீசர்

ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட “வட சென்னை “படத்தின் டீசர்

Latest News, Top Highlights
பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்க்கு பிறகு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டனியில் உருவாகியுள்ள படம் ‘வடசென்னை’. இதில் ஹீரோவாக தனுஷ் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர்,ராதா ரவி இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்திற்க்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கடேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கேங்ஸ்டர் த்ரில்லரான இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். தனுஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு வட சென்னை படத்தின் டீசரை வெளியிட்டார்.தற்போது படத்தின் டீசர் ஒரே நாளில் யூடூபில் 3மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.மேலும் ட்ரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது....
வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் இயக்குனர் அமீர்

வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் இயக்குனர் அமீர்

Shooting Spot News & Gallerys
விசாரணை' படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் 'வட சென்னை'. 3 பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படம், வடசென்னையில் இருக்கும் ஒரு தாதாவின் 30 வருட வாழ்க்கையைச் சொல்லும் விதமாக உருவாகிறது. இதில் தனுஷ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 'வட சென்னை' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாயின. அவரும் அதை உறுதிப்படுத்தினார். ஆனால் படப்பிடிப்பு தேதிகள் தனக்கு ஒத்து வராததால் விஜய் சேதுபதி விலகினார். தற்போது அந்தக் கதாபாத்திரத்தில், நடிகரும் இயக்குநருமான அமீர் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ''அது ஒரு தீவிரமான கதாபாத்திரம். மற்ற நடிகர்கள் மனதில் இருந்தாலும் அமீர் அதை சரியாகச் செய்வார் என வெற்றிமாறன் நினைத்தார். அமீர் அடுத்த கட்ட படப்பிடிப்புல் இணைந்து கொள்வார்'' என படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டடார். தனுஷ் - வெற்றிமாறன்...