11 ஆண்டுகளாக நீளும் திகில் பயணம்… ‘டிமான்டி காலனி 3’ மீது ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு?
11 ஆண்டுகளாக நீளும் திகில் பயணம்... ‘டிமான்டி காலனி 3’ மீது ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு?
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்கள் பல வந்தாலும், சில படங்களே ரசிகர்களின் நினைவில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும். அந்த பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது ‘டிமான்டி காலனி’. 2015-ல் வெளியான முதல் பாகம் ரசிகர்களுக்கு புதுமையான திகில் அனுபவத்தை வழங்கியது. அதனைத் தொடர்ந்து வந்த இரண்டாம் பாகமும் வெற்றிபெற்று, இந்தத் தொடரை தமிழ் சினிமாவின் முக்கியமான ஹாரர் பிராண்டாக மாற்றியது.
அதனால் தான் தற்போது வெளியாக உள்ள ‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகும் இந்த திரைப்படம், முந்தைய பாகங்களில் தொடங்கிய மர்மங்களையும் திகில் அனுபவங்களையும் இன்னும் விரிவாக எடுத்துச் செல்லும் என கூறப்படுகிறத...
