அஜித் மற்றும் இயக்குனர் வினோத் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா
அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார். அஜித் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் தல அஜித்தின் அடுத்த படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் யுவன் கூட்டணி என்பது தல ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்படும் கூட்டணி. அஜித் ஸ்டைலிஷாக, மாஸாக திரையில் தோன்றும் போதெல்லாம் அதற்கு கூடுதல் பலமாக யுவனின் இசை இருந்துள்ளது.
தீனா, பில்லா, பில்லா 2, மங்காத்தா என யுவன் அஜித் கூட்டணியில் வெளிவந்த படங்கள் தல ரசிகர்களின் நரம்புகளை முறுக்கேற வைத்தது. அந்த மாஸ் கூட்டணி இப்போது மீண்டும் சாத்தியமாக உள்ளது. விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு அஜித் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட புகழ் எச்.வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள...

