அக்சய் குமாருடன் கை கோர்க்கும் கணேஷ் வெங்கடராமன் !
நடிகர் கணேஷ் வெங்கட் ராமன் ஹார்பிக்கின் “ சொச் பாரத் ” பிரச்சாரத்தின் தென்னிந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பிரச்சாரத்தின் வடஇந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள அக்சய் குமாருடன் கைகோர்த்துள்ளார் கணேஷ் வெங்கட் ராமன்.
நடிகர் கணேஷ் வெங்கடராமன் தென்னிந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரிந்த புகழ்பெற்ற நடிகர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் நற்பெயரும் , புகழும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்சய் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் மும்பையில் இரண்டு விளம்பர படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள். இதை பற்றி நாம் அவரிடம் கேட்டபோது , “ நான் அக்ஷய் குமாரின் மிகப்பெரிய ரசிகன். இப்போதும் அவர் மது அருந்தாமல் , எந்த தீய பழக்கங்களும் இல்லாமல் , உடலை கட்டுப்பாட்டோடு வைத்துள்ளது. ஆச்சரியம் அளிக்கிறது. அவரோடு சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியா...
