இயக்குநர் ஏ. எல். விஜய் பிறந்த தினம் அவரை பற்றிய சில வரிகள்
திரைப்பட இயக்குனரான இவரது தந்தை ஏ. அழகப்பன் தயாரிப்பாளர் மற்றும் கவுன்சில் தலைவர் ஆவார். இவருக்கு உதயா என்ற சகோதரும் உண்டு. அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.
இவர் இந்திய திரைப்படத் துறையில் பிரபல இயக்குநர். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார். அதன் மூலம் 2009ஆம் ஆண்டு சிறந்த கார்ப்பரேட் விளம்பர விருதை வென்றார்.
கடந்த 2007ம் ஆண்டு அஜித் மற்றும் திரிஷா நடித்த கிரீடம் என்ற திரைப்படத்தில் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். கடந்த 2008ஆம் ஆண்டு பொய் சொல்லப் போறோம் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்குனர். கடந்த 2010ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் ஏமி சாக்சன் நடித்த மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனர் ஆனார். கடந்த 2011ஆம் ஆண்டு விக்ரம், அனுஷ்கா, அமலா பால் மற்றும் சாரா அர்ஜுன் நடித்த தெய்வத்திருமகள் திரைப்படத்தையும், கடந்த 2013ஆம் ஆண்டு விஜய் நடித்த தலைவ...
