இயக்குநர் விஜய் இயக்கத்தில் மாதவன் – சாய் பல்லவி இணையும் புதிய படம்
'இறுதிச்சுற்று' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார் நடிகர் மாதவன். இவர் தற்போது இந்திய திரையுலகின், குறிப்பாக இந்தி திரையுலகின் பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் 'பிரமோத்' பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை 'பிரமோத் பிலிம்ஸ்' சார்பில் பிரத்தீக் சக்கரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். உலகளவில் பிரசித்தி பெற்ற 'லவ் இன் டோக்கியோ', 'ஜுக்னு' போன்ற இந்தி திரைப்படங்களை 'பிரமோத் பிலிம்ஸ்' தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிப்பது, ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் எதிர்பார்ப்பையும் வானளவு அதிகரித்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது....

