Sunday, April 19
Shadow

Tag: #amresh #siva #sakthichidambaram #nikkigalrani

எனக்குன்னு ஒரு இடம் கிடைச்சிருக்கு இசையமைப்பாளர் அம்ரீஷ்

எனக்குன்னு ஒரு இடம் கிடைச்சிருக்கு இசையமைப்பாளர் அம்ரீஷ்

Latest News, Top Highlights
சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் இது...அம்ரீஷ் இசையில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடிய இந்த பாடல் இன்று உலகம் முழுவதும் பாப்புலராகியுள்ளது..யூடியூபில் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள். இது பற்றிய சந்தோஷத்தை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் T.சிவா இசையமைப்பாளர் அம்ரீஷ் இயக்குனர் ஷக்திசிதம்பரம். டி.சிவா பேசும் போது... இந்த பாடல் விஜய் டிவியில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமியால் பாடப் பட்ட போதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்று அவர்களிடம் பேசி ரைட்ஸ் வாங்கி வைத்து விட்டேன். அதற்கு பிறகு தான் அந்த பாடலுக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்தப் பாடலை சார்லி சாப்ளின் 2 படத்திற்காக அம்ரீஷ் இசையில் உபயோகப் படுத்திக் கொண்டோம். இயக்குனர் ஷக்திசிதம்பரம் பேசியதாவது... ...