ஆண்டனி – திரைவிமர்சனம் (புதிய முயற்சி ) Rank 3/5
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக புதிய தொழில்நுட்பத்தில் படங்கள் அதிகம் வருகின்றது அது எல்லமே புதிய இயக்குனர்களின் முயற்சியாகவும் அமைகிறது அந்த வகையில் தமிழின் அதாவது தமிழ் சினிமாவின் முதல் முயர்ச்சி தான் ஆண்டனி படம் இந்த இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஆண்டனி
இந்த படத்தில் நிஷாந்த், வைஷாலி, லால், ரேகா, சம்பத்ராஜ், வெப்பம் ராஜா, சேரன் ராஜ் மற்றும் பலர் நடிப்பில் ஆர்.பாலாஜி ஒளிப்பதிவில் சிவாத்மிகா இசையில் குட்டி குமார் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் ஆண்டனி
கதாநாயகன் ஆண்டனி (நிஷாந்த்), கொடைக்கானல் நகரின் ஸ்டிரிக்டான போலீஸ் எஸ்.ஐ. அவரது தந்தை ஜார்ஜும் (லால்) முன்னாள் போலீஸ் அதிகாரி. தாய் மேரி (ரேகா) விபத்தில் கால்களை இழந்த மாற்றுத்திறனாளி. ஆண்டனியின் காதலி மகா (வைஷாலி) லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண் இளம். ஜார்ஜின் போலீஸ் நண்பர் சம்பத்ராம்.
ப...
