Monday, April 27
Shadow

Tag: #aprnavinoth

எனக்கு 22 வயது, தாய், ஆசிரியராக நடிப்பது சவாலாக இருக்கிறது – அபர்ணா வினோத்

எனக்கு 22 வயது, தாய், ஆசிரியராக நடிப்பது சவாலாக இருக்கிறது – அபர்ணா வினோத்

Latest News, Top Highlights
நாடக மேடை கலைஞர்கள் எப்போதுமே திரைப்படத் துறைக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறார்கள். இந்த நடிகர்கள் வழக்கமான நடிகர்களை தாண்டும் வகையில், மிக நேர்த்தியான நடிப்பை வழங்குவார்கள். அபர்ணா வினோத் 2 படங்கள் மட்டுமே நடித்த, கடவுளின் சொந்த தேசத்திலிருந்து வந்த நடிகையாக இருக்கலாம், ஆனால் மிகச்சிறந்த நடிப்பு அவரை தமிழ் சினிமாவின் கண்களுக்கு காட்டின. ஆரம்பத்தில், விஜய்யின் பைரவாவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது பரத்தின் பெயரிடப்படாத புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார். "நாடக கலைஞராக இருப்பதால், அது என் நடிப்பிற்கான சில துல்லியமான மாற்றங்களை பெற உதவியது. அது தான் 'ஞான் நின்னோடு', 'கோஹினூர்' போன்ற படங்களின் மூலம் எனக்கு நல்ல மைலேஜ் பெற உதவியது என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் விஜயின் பைரவாவில் மருத்துவ கல்லூரி மாணவியாக நடித்த 22 வயதான அபர்ணா வினோத். பரத் திரைப்படத்தில் ...