அரசியல் ஆட்டம் ஆட தொடங்கபோகும் நயன்தாரா
தென்னக சினிமாவின் சூப்பர் ஸ்டார் லேடி என்று அழைக்கப்படும் நயன்தாரா தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வருகிறார் இதனால் தென்னக சினிமாவில் இவருக்கு மார்கெட் அதிகமாகவிட்டது அதே சமயத்தில் சம்பளமும் ஐந்து விரல்களுக்கும் சம்மதம் சொல்லும் தயாரிப்பாளர்கள் அந்த அளவுக்கு மிகவும் கவனமாக கதைகளை தேர்ந்த்டுத்து நடிக்கிறார்.
பொதுவாக ஹீரோகள் படங்கள் தான் இரண்டாம் பாகம் வரும் அதையும் பிரேக் செய்கிறார் நயன்தாரா.
கடந்த ஆண்டு வெளிவந்து நயன்தாராவுக்கு பாராட்டுகளையும், விருதுகளையும் அள்ளித்தந்த படம் அறம். வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படம். இதனை நயன்தாராவின் மானேஜர் கொட்டப்பாடி ராஜேbased ஷ் தயாரித்திருந்தார். நயன்தாராவின் தயாரிப்பு என்றும் சொல்வார்கள். புதுமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கினார்.
தற்போது அறம் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. நயன்தாரா நடிக்கிறார். இதனையும் கோபி நயினாரே இயக்குவதை உறுதிப்படுத்...
