சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா பிறந்த தினம்
நடிகையும், தொகுப்பாளினியுமான அர்ச்சனா, ‘காமெடி டயம்’ மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக காலடி எடுத்து வைத்தவர். இவருடன் இந்த டீமில் நடிகர் சிட்டிபாபுவும் இடம்பெற்றிருந்தார். அதையடுத்து ‘இளமை புதுமை’ , ‘செலிபிரிட்டி கிச்சன்’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
மேலும் இவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருந்தனர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் தடம் பதித்தார். திருமணத்திற்கு பின்னும் டிவி, சினிமா என்று பிஸி தான். இவருக்கு சாரா என்று ஒரு மகள் இருக்கிறார்.
தற்பொழுது அர்ச்சனா ஜீ தமிழ் டிவியில் ‘ச ரீ க ம பா’ நிகஸ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியின் இடையில் அவரது மகள் சாரா படப்பிடிப்பு செட்டுக்குள் வருகை தந்தார். அதுமட்டுமன்றி அம்மா - மகள் இருவரும் இணைந்து விளமபரம் ஒன்றிலும் நடித்துள்ளனர். இந்த போட்டோக்கள் தான் இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்...
