“சின்ன படங்களின் வெற்றியை 4 மணி நேரத்தில் தீர்மானித்து விடுகிறார்கள்” ; ‘கோரிப்பாளையம்’ ’ அரீஷ் குமார் வேதனை..!
புகைப்படம், மாத்தி யோசி, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்து, இளம் ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் அரீஷ் குமார்.
குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பது போல, ராஜ்கிரண், மீனா, கஸ்தூரியில் ஆரம்பித்து தனுஷ் வரை சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய கஸ்தூரிராஜாவின் (காதல் வரும் பருவம் படத்தின்
மூலம் )அறிமுகம் தான் அரீஷ் குமார்..
இன்றைக்கும் எவர்கிரீனாக ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்திருக்கும் சிந்துபைரவி, புன்னகை மன்னன், அண்ணாமலை,பாட்ஷா படம் உட்பட ரஜினி, கமல் என ஸ்டார் நடிகர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கணேஷ்குமாரின் மகன்.
ஆக, வாரிசு அடிப்படையில் சினிமாவில் நுழைவதற்கான வாய்ப்பு சுலபமாக தேடிவந்தாலும் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அரீஷ்குமார், ந...
