Tuesday, April 28
Shadow

Tag: #Athavan #kaala #ranjith #rajinikanth

காலா படத்தில் வசனம் எழுதிய தாராவி இளைஞன்.

காலா படத்தில் வசனம் எழுதிய தாராவி இளைஞன்.

Latest News, Top Highlights
இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "காலா" திரைப்படம் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது , குறிப்பாக படத்தின் வசனங்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் , வலைதளங்களில் பெரும் விவாதத்தை உண்டுபண்ணும் அளவிற்கு பெரும் முக்கியத்துவம்பெற்றதாக இருக்கிறது. காலா படம் தாராவி நிலப்பரப்பை பற்றிய படம் என்பதால் தாராவியில் வாழ்ந்த ஒருவர் இந்தப்படத்திற்கு வசனம் எழுதினால் சரியாக இருக்கும் என்று இயக்குனர் ரஞ்சித் விரும்பியிருக்கிறார். அப்படி தாராவியில் பிறந்து வளர்ந்த மகிழ்நனுக்கு இந்த படத்தில் வசனம் எழுத வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குனர் இரஞ்சித். இயக்குனர் ரஞ்சித் தானே நேரடியாக தாராவிக்கு சென்று ஆய்வு செய்த பிறகே திரைக்கதை எழுதவும் ஆரம்பித்திருக்கிறார். அறிமுக வசனகர்த...