சீதக்காதி படத்தை பற்றி சொல்ல வார்த்தையே இல்ல விஜய் சேதுபதி பெருமிதம்
பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இது விஜய் சேதுபதியின் 25வது படம். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மிக பிரமாண்டமாக வெளியிடும் இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் சீதக்காதி படத்தில் நடித்த ஊட்டி மணி, கலைப்பித்தன், ஸ்ரீரங்கம் ரங்கமணி, ஐஓபி ராமச்சந்திரன், சந்திரா, மணிமேகலை, ஜெயந்தி, எல் மோகன், லோகி உதயகுமார், முத்துக்குமார், விடியல் விநாயகம், அப்துல், ஆதிராசன், ராகவன், கோபாலகிருஷ்ணன், சுஹாசினி சஞ்சீவ், ஜெகஜீவன் என 17 மேடை நாடக கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
சீதக்காதி படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். என்னுடைய குருநாதர் பாலாஜி அண்ணாவின் படம். ...
