பூமி திரைவிமர்சனம் (மக்களின் மனசாட்சி) (4/5)
கொரோனா தாக்கம் காரணமாக பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படம் தற்போது வரை முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாகி வெற்றிகண்டு வருகிறது. அந்த வரிசையில் லக்ஷ்மணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் விவசாயிகளின் கஷ்டத்தை எடுத்து காட்டும் வகையில் பூமி திரைப்படம் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருந்த இப்படம் அவர்களின் எதிர்பார்ப்பை ஓடிடி மூலம் பூமி திரைப்படம் முழுமையடைய செய்ததா? இல்லையா? பார்ப்போம்..
நாசாவில் பணியாற்றும் பூமிநாதன் விடுமுறைக்காக, தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார். அங்கே விவசாயிகள் படும் கஷ்டத்தை பார்த்து, இங்கேயே தங்கி அவர்களுக்கு உதவி செய்ய முடிவுசெய்கிறார்.
ஆனால், சொந்தமாக விவசாயம் செய்யவிடாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏகப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதனை முயியடித்து விவசாயிகளையும், விவசாயத்தையும் எப்பட...