![புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உதவிய நடிகர் மைம் கோபி.](https://www.cinemapluz.com/wp-content/uploads/2018/12/dba755a7-935b-4c01-b74c-1ed09f548264.jpg)
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உதவிய நடிகர் மைம் கோபி.
நடிகர் மைம் கோபி சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர். இவர் மைம் கலை , நடிப்பு பயிற்சி ஆசிரியராகவும் இருக்கிறார். மைம் கலை மூலமாக பல நிகழ்ச்சிகள் நடத்தியும் வருபவர்.
சென்னை எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியுடன் இணைந்து மைம் நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் நிதியை ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் மைம் நிகழ்ச்சியை டான் போஸ்கோ பள்ளி கலையரங்கில் நடத்தினார்கள்.
நடிகர்களாக டான் போஸ்கோ பள்ளி மாணவர்களையே பயிற்சி கொடுத்து நடிக்கவும் வைத்துள்ளார். இது பற்றி மைம் கோபி கூறுகையில்...
குழந்தைப்பருவத்தில் நாம் சொல்லிக்கொடுக்கும் பழக்கவழக்கங்கள்தான் ஒரு மனிதனை மனிதனாக்குகிறது, நல்ல பழக்கங்களும், உதவும் எண்ணமும், மனிதபிமானமும் சிறு வயதிலிருந்தே நாம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும் என்கிற நோக்கில் டான் போஸ்கோ பள்ளி மாணவர்களை மைம் கலையை சொல்லிக்கொடுத்து அதை மேடையேற்றி அதில் வரும் ...