ஆஸ்கார் நோக்கி ‘அந்தோனி’ – இளையராஜா இசையில் உருவான இலங்கைத் தமிழ் திரைப்படம் புதிய வரலாறு
ஆஸ்கார் நோக்கி ‘அந்தோனி’ – இளையராஜா இசையில் உருவான இலங்கைத் தமிழ் திரைப்படம் புதிய வரலாறு
2027 சர்வதேச திரைப்படப் பிரிவுக்கான தேர்வுப் பயணம் ஆரம்பம் | இலங்கைத் தமிழ் சினிமாவுக்கு சர்வதேச அரங்கில் புதிய எதிர்பார்ப்பு
கொழும்பு:
இலங்கைத் தமிழ் சினிமாவின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும் வகையில் உருவாகியுள்ள ‘அந்தோனி’ திரைப்படம், 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது விழாவின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான தேர்வுப் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம் என்ற தனித்துவமான பெருமையைப் பெற்றுள்ள ‘அந்தோனி’, தற்போது சர்வதேச திரைப்பட அரங்கின் கவனத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைவளரி சக இரமணதாஸ் மற்றும் சுகந்தினி இரமணதாஸ் ஆகியோர் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் கயல...


