ஸ்கெட்ச் – விமர்சனம்
வட சென்னையில் வண்டிகளுக்கு பைனாஸ் செய்து வரும் சேட்டுவிடம் வேலை செய்து வருகிறார் விக்ரம். இவர் டியூ கட்டாத வாகனங்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கி வருகிறார். ஒரு நாள் நாயகி தமன்னாவின் தோழியின் வண்டியை தூக்குகிறார்.
அப்போது தமன்னாவை பார்க்கும் விக்ரம், அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில், பிரபல ரவுடியாக இருக்கும் பாபுராஜாவின் காரை நண்பர்களுடன் சேர்ந்து தூக்குகிறார். இதனால், கோபமடையும் பாபுராஜா, விக்ரமையும் நண்பர்களையும் பழிவாங்க நினைக்கிறார்.
சிறிது நாளில் விக்ரமின் நண்பர்களில் ஒவ்வொருத்தராக கொல்லப்படுகிறார்கள். இந்த கொலைகளுக்கு காரணம் யார்? விக்ரமை பாபு ராஜா கொலை செய்தாரா? தமன்னாவுடன் விக்ரம் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் ஸ்கெட்ச் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். காரை ஸ்கெட்ச் போட்டு தூக்குவது தனக்கே உ...

