ரதிமா’வில் காதல் முறிவுக்கு புதுவித இசை மொழி – சாய் அபயங்கரின் 6-வது இண்டி பாடல் வெளியானது!
‘ரதிமா’வில் காதல் முறிவுக்கு புதுவித இசை மொழி – சாய் அபயங்கரின் 6-வது இண்டி பாடல் வெளியானது!
இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கரின் 6-வது சுயாதீன இசைப்பாடலான ‘ரதிமா’ (Radhimaa) வெளியாகியுள்ளது. திங்க் இண்டி (Think Indie) சார்பில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், காதல் முறிவை மையமாகக் கொண்டிருந்தாலும், வழக்கமான சோக மனநிலையைத் தவிர்த்து, இளமைத் துடிப்பும் நேர்மறையான உணர்வும் கலந்த இசை அனுபவமாக உருவாகியுள்ளது.
நவீன பாப் இசையின் துள்ளலான தன்மையுடன் கவ்வாலி இசையின் சாயலையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘ரதிமா’, பிரிவை ஒரு வலியாக மட்டும் பார்க்காமல், வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் மனநிலையைப் பேசுகிறது. சாய் அபயங்கரின் தனித்துவமான இசை அணுகுமுறை பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
பாடலின் இசைக் காணொலியில் சாய் அபயங்கருடன் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடித்துள்ளார். தேஜோ பர...



