புதுமுக நடிகைகளை தன்வசமாக்கும் சந்தானம்
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், சஹான்யா நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது குறித்த பேச்சுவார்த்தை சமீபத்தில் துவங்கியது.
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான 'சக்க போடு போடு ராஜா' படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகியும் வெளியாகவில்லை. செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'மன்னவன் வந்தானடி' படமும் பாதியில் நிற்கிறது.
இந்நிலையில், 'தில்லுக்கு துட்டு 2' படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்க புதுமுக நடிகை தீப்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....