
எனக்கு தல தான் பிடிக்கும் – ரஜினிகாந்த் ஓபன் டாக்
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவைத் தொடர்ந்து தற்போது அரசியலிலும் ஈடுபட இருக்கிறார். விரைவில் இவரது கட்சி குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நட்சத்திரக் கிரிக்கெட் விழாவில் பங்கேற்க மலேசியா சென்றிருக்கிறார். அவருடன் தமிழ் சினிமாவைச் சேர்ந்த 340-க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் சென்றுள்ளனர்.
அங்கு சினிமா பிரபலங்கள் பங்கேற்ற நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் சூர்யாவின் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், கிரிக்கெட் போட்டியின் போது பேசிய நடிகர் ரஜினிகாந்த் தற்போதைய இந்திய அணியில் தல டோனி தான் எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று தெரிவித்துள்ளார். ஆனால் தனக்கு எப்போதுமே பிடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் என்றும் தெரிவித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனும் மலேசியா சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....