எழுத்தாளர்களுக்கு சமூகப்பொறுப்பு அவசியம் ” இயக்குனர் பா.இரஞ்சித்
“நீலம் பண்பாட்டு மையம்” சார்பில் இளம் எழுத்தாளர்களுக்கான பயிலரங்கு நிகழ்வு "சமத்துவம் அறிதல்" என்ற தலைப்பில் மூன்று நாட்கள் (25, 26, 27.10.2018) திண்டிவனத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த இளம் எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
”உளவியலை கட்டமைக்கும் உட்கூறுகள்”, “தமிழகத்தில் கலையும் இலக்கியமும்”, “கலை இலக்கியத்தில் சாதி”, “பொதுப்புத்தியை உதிர்த்தல்”, “சாதி மறுப்பு சாதி ஒழிப்பின் தேவையும் சாத்தியங்களும்” , “சாதி ஒழிப்பு சமத்துவக்கருத்தியலை கலை இலக்கிய வடிவங்களாக்குதல்” ஆகிய தலைப்புகளின் கீழ் எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, அ.மார்க்ஸ், அழகிய பெரியவன், AB.ராஜசேகரன், யாழன் ஆதி, பிரளயன், சுகிர்தா ராணி, வ.கீதா, பாமா உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்வில் உரையாற்றிய இயக்குனர் பா.இரஞ்சித்,
”எழுத்தாளர்களுக்கு சமூகப் பொறுப்பு அவசியம். வாச...
