
“முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்” ; ‘தீதும் நன்றும்’ படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
நாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கியுள்ள படம் தான் 'தீதும் நன்றும்'. இந்தப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார் ராசு ரஞ்சித், மற்ற இரண்டு ஹீரோக்களாக சந்தீப் ராஜ், ஈசன் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இன்னொரு முக்கிய வேடத்தில் கேரளாவை சேர்ந்த லிஜிமோல் ஜோஸ் என்பவர் நடித்துள்ளார்.
'எங்கேயும் எபோதும்' புகழ் சி.சத்யா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே கொடுத்தாலும் துள்ளலான இசையால் ரசிகர்களை மகிழ்விக்கும் வித்தை தெரிந்தவர் இசையமைப்பாளர் சி.சத்யா. தற்போது இசையமைத்துள்ள 'தீதும் நன்றும்' படம் குறித்த தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
"பொதுவாக நாளைய இயக்குனர் மாதிரி டீம் எல்லாம் புது டெக்னீஷியன்களா தான் ஒரு கூட்டணி அமைப்பாங்க.. இந்தப்படத்தோட இய...