சர்வதேச அரங்கில் மிளிரும் ‘என்ன விலை’! அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றது!!
சர்வதேச அரங்கில் மிளிரும் ‘என்ன விலை’! அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றது!!
கருணாஸ் – நிமிஷா சஜயன் நடிப்பில் உருவான ‘என்ன விலை’ திரைப்படத்திற்கு, அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்துள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி இந்த விருதைப் பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் படைப்புகள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், ‘என்ன விலை’ திரைப்படத்திற்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் படக்குழுவினருக்குப் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
கடந்த அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்ற அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில், ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி சார்பில் படத்தின் தயாரிப்பாளர் அனுகோபால் வேணுகோபாலன் விருதைப் பெற்றுக்கொண்டார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பாழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கருணாஸ்...
