
சர்வதேச அரங்கில் மிளிரும் ‘என்ன விலை’! அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றது!!
கருணாஸ் – நிமிஷா சஜயன் நடிப்பில் உருவான ‘என்ன விலை’ திரைப்படத்திற்கு, அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்துள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி இந்த விருதைப் பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் படைப்புகள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், ‘என்ன விலை’ திரைப்படத்திற்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் படக்குழுவினருக்குப் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
கடந்த அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்ற அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில், ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி சார்பில் படத்தின் தயாரிப்பாளர் அனுகோபால் வேணுகோபாலன் விருதைப் பெற்றுக்கொண்டார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பாழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராமேஸ்வரத்தின் கடலோரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், எதிர்பாராத வாழ்க்கைச் சூழலை எதிர்கொள்ளும் ஒரு மீனவரின் கதையை மையமாகக் கொண்டுள்ளது. வாழ்வின் நெருக்கடிகள், நீதிக்கான போராட்டம், தன்மானம் மற்றும் மன உறுதி ஆகியவற்றை உணர்வுபூர்வமாகப் பேசும் படைப்பாக இது அமைந்துள்ளது.
கதையின் இயல்பையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் காட்சிகளின் வழியாக வெளிப்படுத்தியுள்ள ஒளிப்பதிவுக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், படத்தின் கலைத்தரத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. சர்வதேசத் திரைப்பட விழாக்களில் ‘என்ன விலை’ திரைப்படம் தொடர்ந்து பயணித்து வரும் நிலையில், இந்த விருது அதன் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக இணைந்துள்ளது. தமிழ் சினிமாவை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் கலாமயா சினிவெர்ஸின் முயற்சிக்கும் இது குறிப்பிடத்தக்க வெற்றியாக அமைந்துள்ளது.
விருது குறித்து ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி கூறுகையில்:
“அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. ‘என்ன விலை’ திரைப்படத்தின் கதைக்களமும் கதாபாத்திரங்களும் ஒன்றோடொன்று ஆழமாகப் பின்னிப் பிணைந்தவை. அந்த உலகத்தைத் திரையில் காட்சிகளாக உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்குப் பெரும் பாக்கியம். இந்த விருதை இயக்குநர் சஜீவ் பாழூர், தயாரிப்பாளர்கள் ஜித்தேஷ் விஸ்வம்பரன், அனுகோபால் வேணுகோபாலன் மற்றும் என்னுடன் பணியாற்றிய ஒட்டுமொத்த படக்குழுவினருடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர்கள் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் கூறுகையில்:
“ஆல்பி ஆண்டனியின் ஒளிப்பதிவுக்குச் சர்வதேச அளவில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், ‘என்ன விலை’ படக்குழுவினர் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. படத்தின் காட்சி மொழியைச் செம்மைப்படுத்துவதில் அவரது பங்களிப்பு முக்கியமானது. இந்த விருது, படத்தின் கலைநயத்திற்கும் ஒட்டுமொத்தக் குழுவினரின் அர்ப்பணிப்பான உழைப்பிற்கும் கிடைத்துள்ள அங்கீகாரமாக நாங்கள் கருதுகிறோம்” என்றனர்.
கதையின் வலிமையையும் காட்சிகளின் அழகியலையும் இணைத்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம், சர்வதேசத் திரைப்பட விழாவில் பெற்றுள்ள இந்த விருதின் மூலம் தமிழ் சினிமாவின் பயணத்தில் மேலும் ஓர் அடையாளத்தைப் பதித்துள்ளது.

‘Enna Vilai’ Wins Best Cinematography Award at the Atlanta Indian Film Festival!
Karunas and Nimisha Sajayan starrer earns international recognition for cinematographer Alby Antony
The Tamil film Enna Vilai, starring Karunas and Nimisha Sajayan, has won the Best Cinematography award at the Atlanta Indian Film Festival. The award recognises the outstanding visual craftsmanship of the film’s cinematographer, Alby Antony.
The recognition marks another significant milestone for Enna Vilai as the film continues its journey across international film festivals, bringing attention to Tamil cinema on the global stage.
At the award ceremony held on October 3, producer Anugopal Venugopalan received the award on behalf of cinematographer Alby Antony.
Directed by National Award-winning filmmaker Sajeev Pazhoor, Enna Vilai features Karunas, Nimisha Sajayan and several other prominent actors. Set against the coastal landscape of Rameswaram, the film revolves around the life of a fisherman whose world takes an unexpected turn. Exploring themes of justice, dignity and resilience, the film presents an emotionally engaging story rooted in the realities of coastal life.
The award highlights the film’s visual storytelling and the cinematographer’s ability to capture the atmosphere, emotions and intricacies of its world. As Enna Vilai continues to make its presence felt at international film festivals, this achievement adds another important milestone to its journey. It also marks a significant accomplishment for Kalamaya Cineverse in its efforts to take Tamil cinema to a wider global audience.
Speaking about the award, cinematographer Alby Antony said:
“Receiving the Best Cinematography award at the Atlanta Indian Film Festival is a moment of immense pride for me. Enna Vilai is deeply connected to its setting and characters, and it was a privilege to bring that world to life through visuals. I am delighted to share this honour with director Sajeev Pazhoor, producers Jithesh Viswambharan and Anugopal Venugopalan, and the entire team behind the film.”
Producers Jithesh Viswambharan and Anugopal Venugopalan said:
“Alby Antony’s cinematography receiving international recognition is a moment of great pride for everyone associated with Enna Vilai. We see this award as a recognition of the film’s visual language and the dedication and hard work of the entire crew.”
With its compelling narrative and distinctive visual treatment, Enna Vilai continues to strengthen its presence on the international film festival circuit. The Best Cinematography award at the Atlanta Indian Film Festival stands as another proud achievement for the film and its team.
