“எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் மகிழ்ச்சியாக நடித்திருப்பேன்… காஞ்சனா கதாபாத்திரம் கிடைத்தபோது கண்ணீர் வந்தது!” – நிமிஷா சஜயன்
“எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் மகிழ்ச்சியாக நடித்திருப்பேன்… காஞ்சனா கதாபாத்திரம் கிடைத்தபோது கண்ணீர் வந்தது!” – நிமிஷா சஜயன்
செப்டம்பர் 17 முதல் திரையரங்குகளில் வெளியாகும் ‘என்ன விலை’
ஒரு கதையில் கதாபாத்திரங்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அந்தக் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கும் நடிகர்களும் முக்கியம். குறிப்பாக, தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நிமிஷா சஜயன், தற்போது ‘என்ன விலை’ திரைப்படத்தின் மூலம் மற்றுமொரு அழுத்தமான கதாபாத்திரத்தை ரசிகர்களிடம் கொண்டு வருகிறார்.
பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் நிமிஷா சஜயன், வழக்கமான கதைகளைத் தவிர்த்து, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்திப் படமான ‘பபிதா சிங் ரிப்போர்ட்டிங்’ உள்ளிட்ட படங்களில் அவரது மாறுபட்ட நடிப்...
