Wednesday, September 16
Shadow

தமிழக இயக்குநரின் கைவண்ணத்தில் உருவாகும் குஜராத்தி சினிமாவின் முதல் பான்-இந்தியா படம் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’!

தமிழக இயக்குநரின் கைவண்ணத்தில் உருவாகும் குஜராத்தி சினிமாவின் முதல் பான்-இந்தியா படம் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’!

7 இந்திய மொழிகளில் வெளியாகும் இப்படம் – 2027 ராம நவமியில் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது!

குஜராத்தி திரையுலகில் புதிய முயற்சியாகவும், இந்திய சினிமாவின் பல்வேறு பிராந்தியங்களை இணைக்கும் பிரம்மாண்ட படைப்பாகவும் உருவாகி வருகிறது ‘ஸ்ரீ கேசரி நந்தன்’ திரைப்படம். அட்ல் இந்தியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் அட்ல் எம். போசாமியா தயாரித்து வழங்கும் இப்படத்தை, விருது பெற்ற தமிழக திரைப்பட இயக்குநர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் எழுதி இயக்குகிறார்.

‘ஸ்ரீ கேசரி நந்தன்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், குஜராத்தி சினிமாவை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

குஜராத்தி மொழியில் மட்டுமின்றி, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி என மொத்தம் 7 இந்திய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இதன் மூலம் குஜராத்தி திரையுலகின் கதையை இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் முக்கியமான முயற்சியாக ‘ஸ்ரீ கேசரி நந்தன்’ உருவாகியுள்ளது.

தமிழ் – குஜராத்தி கலைஞர்களின் புதிய கூட்டணி

தமிழகத்தைச் சேர்ந்த இயக்குநர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்கும் இப்படத்தில், குஜராத்தி திரையுலகின் முன்னணி நடிகர்களான அர்பித் ரங்கா மற்றும் மௌலிக் சௌஹான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திறமையான கலைஞர்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.

படத்தின் பிரம்மாண்டமான காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கன்னட திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் அபிநந்தன் காஷ்யப் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் மஹிபால் சிங் ரணாவத், ராஜேஷ் தாக்கூர், ஹிரேன் படேல் மற்றும் பரேஷ் ஜக்டா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்களிக்கின்றனர்.

பாரம்பரியத்தையும் நவீன திரைப்படத் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் கதை

நம்பிக்கை, பக்தி, பாரம்பரியம் மற்றும் மாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’, குஜராத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட கதையை நவீன திரைப்பட தொழில்நுட்பத்துடன் இணைத்து பிரம்மாண்டமான திரை அனுபவமாக வழங்குகிறது.

தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்டமான படைப்பாக்க முறையையும், குஜராத்தின் கலாச்சார அடையாளத்தையும் ஒருங்கிணைத்து உருவாகும் இப்படம், குஜராத்தி சினிமாவுக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பல்வேறு மொழிகள் மற்றும் திரையுலகங்களைச் சேர்ந்த கலைஞர்கள் ஒரே படைப்பில் இணைந்திருப்பது ‘ஸ்ரீ கேசரி நந்தன்’ படத்தின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

‘ஸ்ரீ கேசரி நந்தன்’ திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ராம நவமி தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

Tamil Filmmaker Sabari Nathan to Direct Gujarati Pan-India Film ‘Shri Kesari Nandan’

The film to release in seven Indian languages on Ram Navami 2027

Gujarati cinema is set to take a major step onto the national stage with Shri Kesari Nandan, a grand-scale film that aims to bring the cultural identity and traditions of Gujarat to audiences across India and beyond.

Produced and presented by Adal M. Bosamia under the banner of Adal India Movies, Shri Kesari Nandan is being positioned as a landmark Pan-India production from the Gujarati film industry. The film’s First Look poster has already been unveiled.

Adding a unique South Indian connection to the project, award-winning Tamil filmmaker Sabari Nathan Muthupandian has written and directed the film.

A Seven-Language Pan-India Release

Shri Kesari Nandan will not be restricted to Gujarati audiences. The film is set to release in Gujarati, Hindi, Tamil, Telugu, Malayalam, Kannada and Bengali, making it a seven-language Indian release.

The makers are mounting the film on a large scale with the vision of taking Gujarati cinema to a wider national and international audience.

A Unique Collaboration of Gujarati and South Indian Talent

Popular actors Arpit Ranga and Maulik Chauhan headline the film, while talented artistes from different parts of India are also part of the ensemble cast.

Renowned cinematographer Subash Thandapani is handling the cinematography, aiming to give the film a visually rich and international-standard presentation.

Kannada music composer Abhinandan Kashyap is composing the music for the film.

Mahipal Singh Ranawat, Rajesh Thakur, Hiren Patel and Paresh Jagda have joined the project as co-producers.

A Story Rooted in Faith, Culture and Tradition

Centred around themes of faith, devotion, tradition and transformation, Shri Kesari Nandan seeks to combine a traditional narrative with contemporary filmmaking technology and the grand visual style associated with South Indian cinema.

The film also aims to introduce the rich cultural and traditional values of Gujarat to audiences across the country through a larger cinematic canvas.

With filmmakers and artistes from different regions of India coming together, Shri Kesari Nandan is expected to create a distinctive identity for Gujarati cinema while strengthening the connection between India’s diverse regional film industries.

The film is scheduled to have a worldwide theatrical release on Ram Navami in 2027.