Tuesday, February 11
Shadow

Tag: #enpeyarananthan #athulyaravi #santhoshprathab #deepakparameshvar #athithya #sridhervengatesan

அதுல்யா ரவி நடிக்கும் த்ரில்லர் படம்  ‘என் பெயர் ஆனந்தன்’..!

அதுல்யா ரவி நடிக்கும் த்ரில்லர் படம் ‘என் பெயர் ஆனந்தன்’..!

Latest News, Top Highlights
காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்'. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைவரது ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் த்ரில்லர் படமான ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை இவர்தான் இயக்கியுள்ளார். குறும்பட உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்துள்ள இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’. ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ‘ஏமாலி’, ‘காதல் கண் கட்டுதே ’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ள...