கவுதமியின் சம்பள பாக்கியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்: கமல்
துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மும்பை அந்தேரியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டிற்கு நடிகர், நடிகைகள் சென்று போனிகபூரின் தம்பி அனில்கபூர் அவரது மனைவி சுனிதா போனி கபூரின் தாயார், குடும்பத்தினர் மற்றும் ஜான்வி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.
ஸ்ரீதேவியுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் போனி கபூர் வீட்டுக்கு சென்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இதில் நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறிவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் கமல் பேசும்போது, ‘ஸ்ரீதேவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன். ஐஐடி வளாகத்தில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது கண்டனத்துக்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழகத்தி...