துபாயிலிருந்து சென்னைக்கு… புதிய சினிமா பயணத்தை தொடங்கும் ஸெனோஃபர் ஃபாத்திமா!
துபாயிலிருந்து சென்னைக்கு… புதிய சினிமா பயணத்தை தொடங்கும் ஸெனோஃபர் ஃபாத்திமா!
சென்னை – துபாய் திரைப்பட உலகங்களுக்கு இடையே புதிய படைப்பாற்றல் கூட்டணியை உருவாக்கும் இயக்குநர்
சென்னை: துபாயை மையமாகக் கொண்டு சர்வதேச திரைப்படத் தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்தகட்ட சினிமா பயணத்தை சென்னையை மையமாகக் கொண்டு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளார். துபாயில் நடைபெற்று வரும் திரைப்படப் பணிகளுடன் இணைந்து, தனது பிறந்த ஊரான சென்னையிலும் புதிய படைப்புத் திட்டங்களை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
சினிமாவுக்கு எல்லைகள் இல்லை என்பதை தனது படைப்புகள் மூலம் தொடர்ந்து நிரூபித்து வரும் ஸெனோஃபர், தற்போது சென்னை மற்றும் துபாய் திரைப்படத் துறைகளுக்கு இடையே ஒரு வலுவான படைப்பாற்றல் இணைப்பை உருவாக்கும் முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறார். இரு நாடுகள...
