எழுத்தாளர் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் பிறந்த தினம்
கோபிநாத் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தனியார் பண்பலை ஒன்றில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவர் அறந்தாங்கியில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் தன்னுடைய தமிழ் மொழிநடைக்காகவும், தனிப்பாங்கிற்காகவும்(style) இவர் மிகவும் அறியப்படுகிறார்.
இவர் தொகுத்து வழங்கும் சில முக்கியமான நிகழ்ச்சிகள்:
நீயா நானா, விஜய் விருதுகள், குற்றமும் பின்னணியும், நடந்தது என்ன?, உன்னால் முடியும், தற்போது ஒரு எழுத்தாளராகவும் பரிணமித்து வருகிறார்.
இவர் எழுதியுள்ள புத்தகங்கள்:
"தெருவெல்லாம் தேவதைகள்", "ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!", "நேர் நேர் தேமா", "நீயும் நானும்"...
