‘குப்பி’யில் தொடங்கிய வெற்றிப் பயணம்… 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைகோர்க்கும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ்; மலையாள சினிமாவில் புதிய பிரம்மாண்டம் உருவாகிறதா?
‘குப்பி’யில் தொடங்கிய வெற்றிப் பயணம்... 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைகோர்க்கும் டொவினோ தாமஸ் - ஜான்பால் ஜார்ஜ்; மலையாள சினிமாவில் புதிய பிரம்மாண்டம் உருவாகிறதா?
மலையாள திரையுலகில் தரமான உள்ளடக்கத்திற்கும், உணர்வுப்பூர்வமான கதைக்களத்திற்கும் தனி அடையாளமாகத் திகழும் ‘குப்பி’ (Guppy) திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த வெற்றிப் படத்தின் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் மீண்டும் ஒரே படத்தில் இணையவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘குப்பி’ திரைப்படத்தின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு, டொவினோ தாமஸும் ஜான்பால் ஜார்ஜும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதையடுத்து, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் அதை புதிய திரைப்பட அறிவிப்புக்கான முன்னோட்டமாகக் கருதி உற்சாகமாக ...
