‘இம்மார்டல்’ வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!
‘இம்மார்டல்’ வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!
250-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான படம் – ரசிகர்களின் வரவேற்பால் அதிகரிக்கப்பட்ட காட்சிகள்
சென்னை: வித்தியாசமான கதைக்களம், ஃபேண்டஸி மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்வில், தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக்கை பரிசாக வழங்கி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், கயாது லோஹர் உள்ளிட்டோர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘இம்மார்டல்’. கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்கு...

